Pages

Tuesday 23 February 2016

மாசுக்காற்றை சுவாசித்தால் உடல் பருமனா??

அமெரிக்க டியூக் பல்கலைக்கழக நிபுணர்கள் எலி ஒன்றை வைத்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். சீனாவில் பெய்ஜிங் நகரத்தில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் காற்றில் அதிக அளவு மாசு கலந்துள்ளது. அங்கு வசிக்கும் கர்பிணி எலியை ஆராய்ச்சி செய்ததில், எலிகளின் நுரையீரல் மற்றும் கல்லீரலில் வீக்கமும் அலர்ஜியும் ஏற்பட்டது. உடலில் கொழுப்பு அதிகரித்து எடை அதிகரிக்கப்பட்டது. இன்சுலின் பிரச்சனையால் இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. மாசு கலக்காத காற்றை சுவாசித்த எலியை வைத்து சோதித்ததில் எந்த குறைபாடும் எலிக்கு இல்லை. எனவே மாசு கலந்த காற்றை சுவாசித்தால் உடலில் எடை கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


சிவனடி பாத மலையில் மக்கள் கூட்டம்

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிகளவு பக்தர்கள் சிவனடி பாத மலைக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்குள் பத்து லட்சத்துக்கு மேலான பக்தர்கள் வருகை தந்துள்ளனராம். எனினும் பிற்பகலுக்கு மேல் இன்னும் அதிகரிக்கக்கூடும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment

Want to Share This News With Friends?

Quick Search